- Home
- Cinema
- பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன்.. பிரம்மாண்ட தொகையை சம்பளமாக தட்டித்தூக்கிய மணிரத்னம்- எவ்ளோ தெரியுமா?
பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன்.. பிரம்மாண்ட தொகையை சம்பளமாக தட்டித்தூக்கிய மணிரத்னம்- எவ்ளோ தெரியுமா?
Maniratnam : பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார் என்பது குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்திற்கு அளித்து வரும் அமோக வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் 6 நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது. அதன்படி விக்ரம் ரூ.12 கோடியும், ஐஸ்வர்யா ராய் ரூ.10 கோடியும், ஜெயம் ரவி ரூ.8 கோடியும், கார்த்தி ரூ.5 கோடியும், திரிஷா ரூ.3.5 கோடியும் சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் மணிரத்னம் வாங்கிய சம்பளம் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்காக தீயாய் வேலை செய்யும் மணிரத்னம்... ரிலீஸ் தேதியுடன் வந்த ஹாட் அப்டேட்..!
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார் என்பது குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும், இப்படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக பெற்றுக்கொள்ள அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம் வசூலை வாரிக்குவித்து வருவதால், இதன்மூலம் மணிரத்னத்திற்கு பெரும் தொகை சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் மீதிருந்த நம்பிக்கையால் அவர் இவ்வாறு ஒப்பந்தம் செய்ததாகவும், தற்போது அவரின் கணிப்பு படியே படமும் சக்கைபோடு போட்டு வருவதால் செம்ம குஷியில் உள்ளாராம் மணிரத்னம்.
இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் மணிரத்னம் ஒரு கிங்.. பொன்னியின் செல்வன் பார்த்து மெர்சலான ஷங்கர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா